Punjab Kings vs Royal Challengers Bengaluru Qualifier 1 Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

PBKS vs RCB Match Details

  • மோதும் அணிகள்- பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் -  மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - மே 29, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Maharaja Yadavindra Singh International Cricket Stadium, Mullanpur, Chandigarh Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் தட்டையான மேற்பரப்பைக் கொண்டுள்ளதன் காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்காது. அதன் காரணமாக இது அதிக ஸ்கோரிங் கொண்ட ஆட்டமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இங்கு பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PBKS vs RCB: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

PBKS vs RCB Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 35
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 17
  • பஞ்சாப் கிங்ஸ் - 18

PBKS vs RCB Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பில் சால்ட், பிரப்ஷிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், பிரியான்ஷ் ஆர்யா
  • ஆல்ரவுண்டர் - மார்கோ ஜான்சன், ரொமாரியோ ஷெஃபர்ட்
  • பந்து வீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், அர்ஷ்தீப் சிங்.
Advertisement

PBKS vs RCB Predicted Playing 11

Punjab Kings XI: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் ப்ரார், கைல் ஜேமீசன், அர்ஷ்தீப் சிங்.

இம்பேட்க் வீரர் - யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement

Royal Challengers Bengaluru XI: பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன்/டிம் செஃபெர்ட், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெஃபெர்ட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா.

இம்பாக்ட் வீரர் – மயங்க் அகர்வால்

PBKS vs RCB Dream11 Prediction, PBKS vs RCB, PBKS vs RCB Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, PBKS vs RCB Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Punjab Kings vs Royal Challengers Bengaluru

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News