பிஎஸ்எல் ஒப்பந்த மீறல் தொடர்பாக கோர்பின் போஷுக்கு பிசிபி நோட்டீஸ்!

Updated: Sun, Mar 16 2025 22:22 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி  கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தென் அப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்த எஸ்ஏ20 லீக் தொடரின் போது காயத்தை சந்தித்த லிசாத் வில்லியம்ஸ் அதிலிருந்து தற்போது வரை மீளாத காரணத்தால் இத்தொடரில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் லிசாத் வில்லியம்ஸை அவரின் அடிப்படை தொகையான ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் அவர் தொடரில் இருந்து விலகியதன் காரணமாக அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கார்பின் போஷ்க்கை அவரது அடிப்படை ஏலத்தொகையான ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் காரணமாக கார்பின் போஷ் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து விலகினார். முன்னதாக பெஷாவர் ஸால்மி அணிக்காக விளையாட இருந்த நிலையில் ஐபிஎல் ஒப்பந்தம் காரணமாக அவர் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் சூப்பர் லீக் ஓப்பந்ததை கார்பின் போஷ் மீறியதாக அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சட்டப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து பிசிபி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அவரது மேலாளர் வழியாக வருக்கு சட்ட அறிவிப்பு வழங்கப்பட்டது, மேலும் வீரர் தனது தொழில்முறை மற்றும் ஒப்பந்த உறுதிமொழிகளில் இருந்து விலகுவதற்கான தனது செயல்களை நியாயப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவர் லீக்கிலிருந்து வெளியேறுவதால் ஏற்படும் விளைவுகளையும் பிசிபி நிர்வாகம் கோடிட்டுக் காட்டியுள்ளது, மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறது” என்று கூறியுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

ஒருவேளை கார்பின் போஷ் ஐபிஎல் தொடர் ஒப்பந்தம் காரணமாகவே பாகிஸ்தான் சூப்பர் லீக்கை புறக்கணித்துள்ளார் என்று உறுதிசெய்யப்பட்டால், அத்தொடரில் இருந்து அவருக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை