முதல் இன்னிங்ஸில் சொதப்பிய அஸ்வின்; 2ஆவது இன்னிங்ஸில் மரண மாஸ்!

Updated: Wed, Jul 14 2021 20:17 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

அதன்படி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ல் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் விதமாக இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 43 ஓவர்களை வீசிய அஸ்வின் 90 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. 

ஏனெனில் இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கிய வீரராக திகழும் அஸ்வினால் இங்கிலாந்து மண்ணில் விக்கெட் எடுக்க முடியவில்லையா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்தது. 

இதற்கு பதிலளிக்கும் வகையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசிய அஸ்வின் 15 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் சோமர்செட் அணி 69 ரன்களிலேயே சுருண்டது. முதல் இன்னிங்ஸில் அஸ்வின் சோதப்பினாலும் இரண்டாவது இன்னிங்ஸில் தனது அபாரமான பந்துவீச்சால் எதிரணியை சின்னாப்பின்னமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை