பிஎஸ்எல் 2021: பெஸ்வர் ஸால்மி vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Jun 10 2021 14:38 IST
Image Source: Google

நடப்பாண்டு பிஎஸ்எல் டி20 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பெஸ்வர் ஸால்மி vs லாகூர் கலந்தர்ஸ்
  • தேதி - 2021 ஜூன் 10 வியாழன்
  • நேரம் - இரவு 11:30 மைதானம்
  • இடம் - ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி

போட்டி முன்னோட்டம்

பெஸ்வர் ஸால்மி

வஹாப் ரியாஸ் தலைமையிலான் பெஸ்வர் ஸால்மி அணி நடப்பாண்டு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது. 

அணியில் சோயிப் மாலிக், டேவிட் மில்லர், இமாம் உல் ஹக் என அதிரடி ஆட்டகாரர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. பந்துவீச்சில் வஹாப் ரியாஸ், முகமது இர்ஃபான், ரோமன் பாவல், ஃபாபியன் ஆலன் ஆகியோர் உள்ளதால் பெஸ்வர் ஸால்மி அணியின் வெற்றி வாய்ப்பு ஏறத்தாள உறுதியாகிவுள்ளது. 

லாகூர் கலந்தர்ஸ்

லாகூர் கலந்தர்ஸ் அணி நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இருப்பினும் பென் டங்க், ஃபகர் ஸ்மான், முகமது ஹபீஸ் ஆகியோர் தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

அணியின் நம்பிக்கையாக ரஷீத் கான் திகழ்கிறார். நேற்றைய போட்டியிலும் இவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி வெற்றியைப் பெற்றது. பந்துவீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி, ஜேம்ஸ் ஃபால்க்னர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் எதிரணிக்கு இப்போட்டி சவாலானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெஸ்வர் ஸால்மி அணி 8 முறையும், லாகூர் கலந்தர்ஸ் அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

உத்தேச அணி

பெஸ்வர் ஸால்மி: கம்ரான் அக்மல், இமாம்-உல்-ஹக், சோயப் மாலிக், ஹைதர் அலி, டேவிட் மில்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஃபேபியன் ஆலன், உமைத் ஆசிப், வஹாப் ரியாஸ் (இ), முகமது இம்ரான், முகமது இர்ஃபான்.

லாகூர் கலந்தர்கள்: ஃபகர் ஸமான், சோஹைல் அக்தர் (கே), முஹம்மது பைசன், முகமது ஹபீஸ், பென் டங்க் , டிம் டேவிட், ஜேம்ஸ் ஃபால்க்னர், ரஷீத் கான், அகமது தானியல், ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - பென் டங்க்
  • பேட்ஸ்மேன்கள் - சோஹைல் அக்தர், ஃபகர் ஸமான், இமாம்-உல் ஹக், ஹைதர் அலி
  • ஆல்ரவுண்டர்கள் - முகமது ஹபீஸ், ஜேம்ஸ் பால்க்னர், சோயிப் மாலிக்
  • பந்து வீச்சாளர்கள் - ஷாஹீன் அப்ரிடி, ரஷீத்-கான், வஹாப் ரியாஸ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை