ரிஸ்வானின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்த பிலிப் சால்ட்!

Updated: Fri, Dec 22 2023 14:07 IST
ரிஸ்வானின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்த பிலிப் சால்ட்! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியாது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவுசெய்து தொடரை சமநிலையில் வைத்திருந்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 38 ரன்களைச் சேர்த்தார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில் இத்தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்தத் தொடரில் 40, 25, 109*, 119, 38 என அதிரடியாக ரன்கள் குவித்திருக்கிறார். இந்த தொடரில் இவர் ஒட்டுமொத்தமாக இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு 30+ ரன்களை எடுத்து 331 ரன்கள் குவித்திருக்கிறார். 

இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான டி20 தொடர்களில், ஒரு தனிப்பட்ட பேட்ஸ்மேன் குவித்த அதிகபட்ச ரன்களாகவும் இது பதிவானது. முன்னதாக கடந் 20222ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 6 டி20 போட்டியில் விளையாடிய பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 316 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது 5 போட்டிகளில் 331 ரன்களை குவித்து பிலிப் சால்ட் அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

  • பில் சால்ட் – 5 போட்டிகள் – வெஸ்ட் இண்டீஸ் – 331 ரன்கள்
  • முகமது ரிஸ்வான் – 6 போட்டிகள் – இங்கிலாந்து -316 ரன்கள்
  • மார்க் சாப்மேன் – 5 போட்டிகள் – பாகிஸ்தான் – 290 ரன்கள்
  • பாபர் ஆசாம் – 7 போட்டிகள் – இங்கிலாந்து – 285 ரன்கள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை