தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஜனவரி 26ஆம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள், டி20 அணிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படவுள்ளார்.

Advertisement

இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி மும்பையில் பயிற்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், முதல் நாள் பயிற்சியின்போதே துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தொடைப் பகுதி தசைப் பிடிப்பு காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். 

Advertisement

ஒருநாள் போட்டிகளுக்கு முன்பு காயம் சரியாகவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் அணியில் இணைந்துகொண்டார். தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு முன்பு, கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். 

அப்போது ரோஹித் ஷர்மாவுக்கும், எனக்கும் பிரச்சினை எதுவும் கிடையாது என கூறினார். மேலும், தென் ஆப்பிரிக்காவில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. இந்த முறை நிச்சயம் வெற்றியுடன் நாடு திரும்புவோம் என அதிரடியாக பேசினார்.

இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய டெஸ்ட் அணிக்குழு தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ புகைப்படங்களுடன் ட்வீட் வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் பலர் ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’ எனப் பதிவிட்டு வருகின்றனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News