விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; நலம் விசாரித்த பிரதமர்!
இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த். இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், வங்கதேசத்துக்கு எதிராக அண்மையில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் விளையாடிய ரிஷப் பந்த், அடுத்ததாக நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரிஷப் பந்த் டெல்லியிலிருந்து ரூர்கேலாவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஹரித்வார் மாவட்டம் நார்சன் பகுதியில் அவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் பலமுறை சுழன்று விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதன்பின் அங்கிருந்தவர் ரிஷப் பந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் விரைவில் பூரண குணமடைந்து வர வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலதரப்பினரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர். அதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடியும் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக டுவீட் செய்திருந்தார்.
மேலும், ரிஷப் பந்தின் தாயை தொடர்புகொண்டு அவரது உடல்நிலை குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார். இதனை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.