இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் அந்த அணியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி முன்னாள் வீரர்களான குமார் சங்கக்காரா, ஈயன் மோர்கன், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் இந்தியாவின் ராகுல் டிராவிட்டின் பெயரும் இடம்பிடித்திருந்தது. 

Advertisement

இநிலையில், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு அவர், ஐபிஎல் அணிகளில் பயிற்சியாளராக தொடர விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், “இப்போது எனக்கு சர்வதேச அணிக்காக பயிற்சியாளராக செயல்படுவதற்கு உண்மையில் எனக்கு நெரம் இல்லை என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு சர்வதேச அணியில் பயிற்சியாளராக இருக்க வேண்டும் எனில் அதற்காக அதிக நேரத்தை செலுத்த வேண்டும். 

மேலும் எனது வர்ணனையாளர் வேலைகள் மற்றும் கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தினருடன் அதிகம் நேரத்தை செலவிடாதது உள்ளிட்ட காரணங்களினாலும் இதனை என்னால் செய்யமுடியாது. மற்ற சர்வதேச அணிகளுக்கு பயிற்சியளிப்பதை ஒப்பீடுகையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு பயிற்சி அளிப்பது சற்று வித்தியாசமானது. மேலும் இங்கிலாந்து அணி  ஆனால் இப்போது இங்கிலாந்து அணி அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தங்கள் பயிற்சியாளரை நியமிக்கும் என்பதால், என்னால் அதில் அதிகளவு ஈடுபடுத்த முடியாது. எனவே அவர்கள் தங்களுடைய பட்டியலில் இருந்து எனது பெயரை இப்போதே நீக்கிவிடலாம்.

மேற்கொண்டு நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் இத்தொடரின் ஆரம்ப நாட்களில் ஒரு வீரராக இருந்தாலும் சரி அல்லது மும்பையில் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சில வருடங்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு வருடமும் நான் எனது சிறந்த செயல்பாட்டை நான் வழங்கி இருக்கிறேன். மேலும் டெல்லி அணியில் கடந்த ஏழு சீசன்களாக பயிற்சியாளராக இருந்த நிலைலும், துரதிர்ஷ்டவசமாக நான் விரும்பிய விதத்தில் எதும் நடக்கவில்லை. அதனால் அவர்கள் இம்முடிவை எடுத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News