சர்ஃப்ராஸ் தேர்வுவாகதது இதற்காக தான்; தேர்வு குழுவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
உலக கிரிக்கெட் அளவில் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறும் நிலையில், சர்ஃப்ராஸ் கானை சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை இந்நிலையில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்பது குறித்து தேர்வு குழுவினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அதில் சதம் அடித்து விட்டு களத்தில் துள்ளி குதித்து சர்ஃப்ராஸ் கான் கொண்டாடுகிறார். இது வரம்பு மீறிய செயலாகும். மேலும் களத்திலும் களத்திற்கு வெளியிலும் அவருடைய நடவடிக்கை சரியில்லை.
மேலும் உடல் பருமனாக இருக்கிறார். இதனால்தான் நாங்கள் சர்ஃப்ராஸ் கானை அணியில் சேர்க்கவில்லை என்று தேர்வுக்குழு விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்திற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து வாய்ப்பு வழங்காமல் மறுக்கப்படும் வீரர் சதம் அடிக்கும் போது தன்னுடைய கோபத்தை கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
விராட் கோலி எல்லாம் சதம் அடித்து விட்டால் கொண்டாடுவது இல்லையா?. மேலும் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். இதனால் விராட் கோலியை அணியை விட்டு நீக்கிவிடுவீர்களா. இது தவறு கிடையாதா விராட் கோலிக்கு ஒரு நியாயம் சர்ப்ராஸ் கானுக்கு ஒரு நியாயமா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
மேலும் சர்ஃப்ராஸ் கான் உடல் எடையை குறைத்து இருக்கிறார். ஒல்லியான வீரன்தான் வேண்டும் என்பதற்கு அவர் என்ன பேஷன் ஷோவிலா கலந்து கொள்ளப் போகிறார் என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். சர்ஃப்ராஸ் கான் மீது இத்தகைய வெறுப்புடன் பிசிசி ஐ நடந்து கொள்ளத் தேவையில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.