சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பிரஷித் கிருஷ்ணா
Prasidh Unwanted Record: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா ஓவரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேமி ஸ்மித் 24 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 84 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சமத்தில் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்இத் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தியதுடன் இரட்டை சதத்தை நோக்கியும் நகர்ந்து வருகின்றனர். மேலும் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 300 ரன்களை எட்டியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் சோபிக்க தவறியதுடன் மோசமான சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார். அந்தவகையில் இன்னிங்ஸின் 32ஆவது ஓவரை பிரஷித் கிருஷ்ணா வீசிய நிலையில் அந்த ஓவரை எதிர்கொண்ட ஜேமி ஸ்மித் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகள் என மொத்தமாக 23 ரன்களை விளாசித்தள்ளினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்களைக் கொடுத்த நான்காவது இந்திய வீரர் எனும் மோசமான சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் வீசிய அதிக ரன்கள் கொண்ட ஓவர்கள்
- 27 ரன்கள் - ஹர்பஜன் சிங் vs பாகிஸ்தான், லாகூர் (2006)
- 25 ரன்கள் - முனாஃப் படேல் vs வெஸ்ட் இண்டீஸ், பாசெட்டெர் (2006)
- 24 ரன்கள் - கர்ண் சர்மா vs ஆஸ்திரேலியா, அடிலெய்டு (2014)
- 23 ரன்கள் - பிரசித் கிருஷ்ணா vs இங்கிலாந்து, பர்மிங்காம் (2025)
- 22 ரன்கள் - இர்பான் பதான் vs பாகிஸ்தான், பைசலாபாத் (2006)
இது மட்டுமல்ல, பர்மிங்ஹாம் டெஸ்டில் பிரஷித் கிருஷ்ணா 13 ஓவர்களில் 72 ரன்க்ளை கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. இதன் காரணமாக அவரது டெஸ்ட் எகானமி ரேட் 5.28 ஆக மாறியுள்ளது. இது 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட பந்துகளை வீசிய எந்த வேகப்பந்து வீச்சாளரின் மோசமான எகானமி ரேட்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான எகானமி ரேட் (குறைந்தது 500 பந்துகள்):
- 5.28 – பிரசித் கிருஷ்ணா (இந்தியா)
- 4.77 – வருண் ஆரோன் (இந்தியா)
- 4.66 – ஜாகீர் கான் (ஆப்கானிஸ்தான்)
- 4.63 – அமீர் ஜமால் (பாகிஸ்தான்)
- 4.59 – நஹித் ராணா (வங்காளதேசம்)
England Playing XI : ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.
Also Read: LIVE Cricket Score
India Playing XI : கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், நிதீஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.