பிரதிகா ராவல், இங்கிலாந்து அணி வீராங்கனைகளுக்கு அபராதம்!

Updated: Fri, Jul 18 2025 15:46 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இந்திய அணி வீராங்கனை பிரதிகா ரவால் மற்றும் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இங்கிலாந்து அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதிகா ராவல் பேட்டிங் செய்யும் போது எதிரணி பந்துவீச்சாளர்களை இடிப்பது போன்று சிங்கிள்களை ஓடினார். மேலும் அவர் ஆட்டமிழந்த பிறகு எதிரணி வீராங்கனையிடம் வார்த்தை மோதலிலும் ஈடுப்பட்டிருந்தார். 

இது ஐசிசி நடத்தை விதிகளின் படி குற்றம் என்பதால், பிரதிகா ராவலிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கரும்புள்ளியையும் அபராதமாக வழங்கியுள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அணியின் கேப்டன் உள்பட பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

மேலும் பிரதிகா ராவல் மற்றும் இங்கிலாந்து அணி கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்டு ஆகியோர் தங்களின் குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன் அபராதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் மீது மேற்கொண்டு விசாரணைகள் தேவை இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை