சாம்பியன்ஸ் கோப்பை 2025, இரண்டாவது அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - உத்தேச லெவன்!

Updated: Wed, Mar 05 2025 09:56 IST
Image Source: Google

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதவில் பார்ப்போம். 

தென் ஆப்பிரிக்க அணி

நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் டெம்பா பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்த விரும்பும். முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத டெம்பா பவுமா இப்போட்டியில் மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்திருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு லெவனில் இடம் கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி கடந்த சில போட்டிகளில் சரியாக செயல்படாத காரணத்தால் அவருக்கு பதிலாக கார்பின் போஷ் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. மேற்கொண்டு மற்ற வீரர்கள் தங்கள் இடங்களை தக்கவைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

South Africa Probable Playing XI: ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி/கார்பின் போஷ்

நியூசிலாந்து அணி  

மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் கடைசி லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அந்த அணி தோல்வியை தழுவி உள்ளதால், அதிலிருந்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முயற்சியில் நியூசிலாந்து அணி இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. 

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் டாம் லேதம், ரச்சின் ரவீந்திரா, வில் யங், கிளென் பிலீப்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அந்த அணியின் மூத்த வீரர் கேன் வில்லியம்சனும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க் ஆகியோருடன் மைக்கேல் பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திராவும் சில ஓவர்களை வீச முடியும் என்பது அணிக்கு கூடுதல் சாதக்கத்தை வழங்கும்.

Also Read: Funding To Save Test Cricket

New Zealand Probable Playing XI: வில் யங், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை