வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்கம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீசு அழைத்தார்.  இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து ஸோர்ஸியுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். அதான்பின் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களுடைய முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்தும் அசத்தினர்.

Advertisement

அதன்பின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால்தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஸோர்ஸி 141 ரன்களுடனும், பெட்டிங்ஹாம் 28 ரன்களுடனும் தொடந்தனர். இருவரும் இணைந்து இன்றைய ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. இதில் டேவிட் பெட்டிங்ஹாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 59 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியான் திரும்பினார்.

அதேசமயம் மறுபக்கம் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டோனி டி ஸோர்ஸியும் 177 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கைல் வெர்ரைனும் ரன்கள் ஏதுமின்றியும், ரியான் ரிக்கெல்டன் 12 ரன்களுடனும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி வியான் முல்டர் மற்றும் சேனுரான் முத்துசாமி ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் 5 ரன்களைத் தாண்டியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வியான் முல்டர் சதமடித்து அசத்த, சேனுரன் முத்துசாமி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 572 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வியான் முல்டர் 105 ரன்களையும், சேனுரன் முத்துசாமி 68 ரன்களையும் சேர்த்து களத்தில் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையாடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் சாத்மான் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன், ஸகிர் ஹசன், ஹசன் மஹ்முத் என களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 4 விக்கெட்டுகளை இழந்துள்ளதுடன் 38 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. அந்த அணியில் மொமினுல் ஹக் 6 ரன்களுடனும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், டேன் பீட்டர்சன், கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 537 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணியானது நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News