ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.

Advertisement

பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது கடைசி வரை போராடி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Advertisement

இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், "முதலில் நான் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உண்மையிலேயே இந்த போட்டியிலும் அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் அவர்கள் ஒரு தரம் வாய்ந்த அணி என்பதை இந்த போட்டியின் மூலமும் அவர்கள் நிரூபித்துள்ளனர்.

உண்மையில் இந்திய அணியின் வீரர்கள் விளையாடிய விதமே அவர்களது வெற்றிக்கு காரணம். இருந்த போதும் நாங்கள் இன்றைய போட்டியில் போராடிய விதத்தை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாக்அவுட் போட்டியில் இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் இந்தியா போன்ற ஒரு தரமான அணியிடம் தோல்வி அடைந்ததில் நினைத்து நாங்கள் மகிழ்கிறோம்.

இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டியில் அனைத்து விதத்திலும் இந்திய அணி எங்களை விட சிறப்பாக செயல்பட்டது. இந்த மைதானத்தில் இருந்த ரசிகர்களும் மிகச்சிறப்பாக ஆதரவளித்தனர். ஆனாலும் ரசிகர்கள் இந்திய அணிக்காக மட்டுமே ஒருதலை பட்சமாக இருந்ததாக நினைக்கிறேன். இருந்தாலும் இங்கு இவ்வளவு பேர் மத்தியில் விளையாடியதையும் இந்தியா இந்த தொடரையும் நடத்தியதும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒரு அணியாக நாங்கள் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாகவே விளையாடி வந்தோம். இந்த தொடரில் ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்சல் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்பெஷல் பிளேயர்களாக திகழ்ந்தனர். பவுலர்களும் மிகச்சிறப்பாகவே செயல்பட்டனர். ஒரு அணியாக நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர காத்திருக்கிறோம்” என கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News