பிஎஸ்எல் 2021: ஃபால்க்னர் பந்து வீச்சில் 152 ரன்களுக்கு சுருண்ட இஸ்லாமாபாத் யுனைடெட்!
அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, சதாப் கான் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஃப்திகார் அஹ்மத் - ஆசிப் அலி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் இஃப்திகர் அஹ்மத் 49 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிப் அலி அரைசதமடித்து அணிக்கு உதவினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஆசிப் அலி 75 ரன்கள் எடுத்தார். லாகூர் கலந்தர்ஸ் அணி தரப்பில் ஜேம்ஸ் ஃபால்க்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.