பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஸ்வர் ஸால்மி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு உஸ்மான் கவாஜா சதமடித்தும், காலின் முன்ரோ, பிராண்டன் கிங், ஆசிப் அலி ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினர். 

Advertisement

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 105 ரன்களை சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அதன்பின் இமாலய இலக்கை துரத்திய பெஸ்வர் ஸால்மி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஹஸ்ரதுல்லா ஸஸாய், இமாம் உல் ஹக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த காம்ரன் அக்மல் - சோயிப் மாலிக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

பின் 53 ரன்களில் காம்ரன் அக்மல் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 68 ரன்களில் சோயிப் மாலிக்கும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

Advertisement

இருப்பினும் இறுதிவரை போராடியா பெஸ்வர் ஸால்மி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பெஸ்வர் ஸால்மி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவுசெய்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News