ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி, கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

இதையடுத்து முல்தான் சுல்தான்ஸ் அணி லிலே ரஸ்ஸோ, குஷ்டில் ஷா ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.  
அந்த அணியில் அதிகபட்சமாக ரிலே ரஸ்ஸோ, குஷ்டில் ஷா ஆகியோர் தலா 44 ரன்களைச் சேர்த்தனர். கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisement

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளுக்கும் வகையில் ஷர்ஜில் கான், மார்டின் கப்தில், நஜிபுல்லா ஸட்ரான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் - சத்விக் வால்டன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் அரைசதம் கடந்து அசத்தினார். 

பின்னர் 35 ரன்களில் வால்டன் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி  7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபர் அசாம் 85 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம முல்தான் சுல்தான்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News