பிஎஸ்எல் 2021: மில்லர், அக்மல் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த பெஸ்வர் ஸால்மி!

Updated: Sat, Jun 12 2021 23:30 IST
PSL 2021: Peshawar Zalmi has managed to post a massive first innings total (Image Source: Google)

பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசனில் இன்று நடைபெற்று வரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணி, பெஸ்வர் ஸால்மி அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்ட கிளாடியேட்டர்ஸ் முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. 

இதையடுத்து களமிறங்கிய பெஸ்வர் ஸால்மி அணியின் தொடக்க வீரர் ஹைதர் அலி முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சொயிப் மாலிக் 2 ரன்களில் அட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த காம்ரன் அக்மல் - டேவிட் மில்லர் இணை எதிரணி பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 59 ரன்கள் எடுத்திருந்த காம்ரன் அக்மல் ஆட்டமிழக்க, 73 ரன்களில் டேவிட் மில்லரும் ஆடமிழந்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரோவன் பாவல் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஸ்வர் ஸால்மி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை குவித்துள்ளது. குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் முகமது நவாஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை