பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்றுவரும் 14ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
Advertisement
இப்போட்டியில் டாஸ் வென்ற்அ இஸ்லாமாபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் பால் ஸ்டிர்லிங் 39 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 30 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய காலின் முன்ரோ - சதாப் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் முன்ரோ 33 ரன்களையும், சதாப் கான் 34 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.