பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு 192 ரன்கள் இலக்கு!

Updated: Mon, Feb 14 2022 22:06 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்றுவரும் 21ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சதாப் கான், லியாம் டௌசன், அசாம் கான், ஆசிஃப் அலி என அனைவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களைச் சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை