பிஎஸ்எல் 2022: கலந்தர்ஸுக்கு 171 டார்கெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கலந்தர்ஸ் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி பாபர் ஆசாம் - ஷர்ஜீல் கான் இணை கராச்சி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த அணி நல்ல அடித்தளத்தை அமைத்து தந்தது.
இதில் பாபர் ஆசாம் 41 ரன்னில் ஆட்டமிழக்க, ஷர்ஜீல் கான் அரைசதம் கடந்தார். அடுத்து வந்த முகமது நபி 15 ரன்னிலும், ஜோ கிளர்க் 24 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷர்ஜீல் கான் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த வீரர்களாலும் சரிவர சோபிக்க முடியவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைச் சேர்த்தது. கலந்தர்ஸ் அணி தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லாகூர் கலந்தர்ஸ் அணி விளையாடி வருகிறது.