பிஎஸ்எல் 2022: அதிரடியில் மிரட்டும் ஃபகர் ஸமான்; சுல்தான்ஸுக்கு 180 டார்கெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்றுவரும் 17ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணியில் அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - காம்ரன் குலாம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஃபகர் ஸமான் அரைசதம் அடித்து அசத்தினார்.
பின்னர் காம்ரன் குலாம் 42 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஃபகர் ஸமான் 60 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய முகமது ஹபீஸ் தனது பங்கிற்கு 43 ரன்களை விளாசினார்.
இறுதியில் பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி 26 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது.