பிஎஸ்எல் 2022: அதிரடியில் மிரட்டும் ஃபகர் ஸமான்; கிளாடியேட்டர்ஸுக்கு 205 டார்கெட்!
பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் லூகூர் கலந்தர்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - அப்துல்லா ஷஃபிக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
இதில் ஷஃபிக் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஃபகர் ஸ்மான் அரைசதம் கடந்து அசத்தினார். அடுத்து களமிறங்கிய குலாம், முகமது ஹபீஸ், பிலிப் சால் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபகர் ஸமானும் விக்கெட்டை இழக்க, இறுதியில் ஹேரி ப்ரூக் அதிரடியாக விளையாடி 41 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் மூலம் லாகூர் காலந்தர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்தி குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடுகிறது.