பிஎஸ்எல் 2022: ஷான் மசூத் அதிரடி; கிளாடியேட்டர்ஸுக்கு 175 டார்கெட்!

Updated: Mon, Jan 31 2022 21:46 IST
PSL 2022: Multan Sultans finishes off 174/4 (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சோயிப் மக்சூத், ரிலே ரொஸ்ஸோ ஆகியோர் தலா 21 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

இருப்பினும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மசூத் அரைசதம் கடந்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மசூத் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் டிம் டேவிட் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 16 பந்துகளில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 28 ரன்களைச் சேர்த்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை