பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்றுவரும் 16ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷ்வர் ஸால்மி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு முகம்து ரிஸ்வான் - ஷான் மசூத் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
பின் 34 ரன்களில் ரிஸ்வான் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஷான் மசூத் அரைசதம் கடந்து அசத்தினார். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் தனது பங்கிற்கு 34 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
அதன்பின் 68 ரன்களில் ஷான் மக்சூத் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் ரன் குவிக்கு திணறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது.
பெஷ்வர் ஸால்மி அணி தரப்பில் சாகிப் மக்சூத், வஹாப் ரியாஸ், சல்மான் இர்சத் தல 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.