PSL 2023: இஸ்லாமாபாத் யுனைடெட்டை வீழ்த்தியது பெஷாவர்  ஸால்மி!

Updated: Sun, Mar 12 2023 20:27 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 29 ஆவது ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலபாரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி விளையாடிய பெஷாவர் அணியில் சைம் அயூப் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ஹாரிஸ் - பனுகா ராஜபக்ஷ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஹாரிஸ் அரைசதம் கடந்து அசத்தினார் .

அதேசமயம் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராஜபக்ஷா 41 ரன்கலில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கொஹ்லர் காட்மோர் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ஹரிஸும் 79 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும், சதாப் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் அணியின் டார் ஆர்டர் வீரர்கள் ஹசன் நவாஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், சோயிப் மக்சூத், காலின் முன்ரோ என அடுத்தடுத்து வொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - சதப் கான் இணை ஓரளவு விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் குர்பாஸ் 33 ரன்களிலும், சதாப் கான் 28 ரன்களிலும் ஆட்டமிழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடி ஃபஹீம் அஷ்ரஃபும் 38 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதனால் 19.4 ஓவர்களிலேயே இஸ்லாமாபாத் யுனைடெட் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை