PSL 2023: பரபரப்பான ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Wed, Feb 22 2023 22:27 IST
Image Source: Google

பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 11அவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஷான் மசூத் - கேப்டன் முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் மளமளவனெ உயர்ந்தது. 

பின் 33 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து பவுண்டரிகளால் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து வந்த ரிஸ்வான் 60 பந்துகளில் தனது இரண்டாவது பிஎஸ்எல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதற்கிடையில் ரைலி ரூஸோவ் 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் முகமது ரிஸ்வான் 64 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 110 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு ஜேம்ஸ் வின்ஸ் - மேத்யூ வேட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 20 ரன்களை எடுத்திருந்த மேத்யூ வேட் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த ஹைதர் அலி 12, சோயப் மாலிக் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் அரைசதம் கடந்தார். பின் 34 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 75 ரன்களைச் சேர்த்திருந்த ஜேம்ஸ் வின்ஸ் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் இமாத் வாசிம் - பென் கட்டிங் இணை இலக்கை அடைய கடுமையாக போராடியனர். 

இறுதியில் அந்த அணி வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இமாத் வாசீம் மற்றும் பென் கட்டிங் ஆகியோர் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அதற்குள் பென் கட்டிங் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதானல் கடைசி பந்தில் கராச்சி அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. 

இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாச்த்தில் கராச்சி கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை