PSL 2023: பெஷாவர் ஸால்மியை பந்தாடியது முல்தான் சுல்தான்ஸ்!

Updated: Fri, Feb 17 2023 22:43 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரி 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷான் முசூத் 20 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த் கேப்டன் முகமது ரிஸ்வான் - ரைலீ ரூஸொவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் அணியின் ஸ்கோரை மாளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

அதன்பின் 42 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 66 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ரூஸொவுடன் இணை டேவிட் மில்லரும் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு அசத்தினார். இதற்கிடையில் ரைலீ ரூஸோவ் 35 பந்துகளில் 12 பவுண்டர், 2 சிக்சர்கள் என 75 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இறுதியில் பொல்லார்டும் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 ரன்களைச் சேர்த்தார். டேவிட் மில்லர் 23 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை சேர்த்தது. பெஷாவர் ஸால்மி சல்மான் இர்ஷாத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ஹாரிஸ் - சாய்ம் அயூப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அயூப் அரைசதம் கடந்த கையோடு 53 ரன்களில் ஆட்டமிழக்க, முகமது ஹாரிஸ் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய டாம் கொஹ்லர் 3, ரோவ்மன் பாவெல் 23, பனுகா ராஜபக்ஷா 1, ஜேம்ஸ் நீஷம் 12 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். 

இதனால் பெஷாவர் ஸால்மி அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் இஷானுல்லா, உஸாமா மிர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை