பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய உஸ்மான் கான்; கராச்சி கிங்ஸுக்கு 190 டார்கெட்!

Updated: Sun, Mar 03 2024 21:16 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - முலதான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் 13 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ரிஸ்வானுடன் இணைந்த உஸ்மான் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து அசத்தினார். அதன்பின் 58 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய இஃப்திகர் அஹ்மதும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை தொடர்ந்த உஸ்மான் கான் 56 பந்துகளில் தனது சதத்தைப்பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த உஸ்மான் கான் 10 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 106 ரன்களை குவித்தார். இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை