விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சக வீரரை தாக்கிய உபைத் ஷா - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றி முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீர்ர் யாசிர் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தியதுடன், 87 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழாந்தார். மேற்கொண்டு இஃப்திகார் அஹ்மத் 40 ரன்களையும், உஸ்மான் கான் 39 ரன்களையும், கேப்டன் முகமது ரிஸ்வான் 32 ரன்களையும் சேர்க்க முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை மட்டுமே சேர்த்த்து. லாகூர் கலந்தர்ஸ் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லாகூர் கலந்தர்ஸ் அணியில் சிக்கந்தர் ரஸா 50 ரன்களையும், சாம் பில்லிங்ஸ் 43 ரன்களையும், ஃபகர் ஸமான் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உபைத் ஷா விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடிய தருணத்தில் சக அணி வீரரை எதிர்பாராத விதமாக தாக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்த போட்டியின் 15ஆவது ஓவரை உபைத் ஷா வீசிய நிலையில், ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட சாம் பில்லிங்ஸ் தூக்கி அடிக்கும் முயற்சியில் கம்ரன் குலாமிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
இதனையடுத்து விக்கெட் வீழ்த்தியதை உபைத் ஷா ஆக்ரோசமாக கொண்டாடிய நிலையில், அப்போது அவரருகே வந்த சக அணி விக்கெட் கீப்பரான உஸ்மான் கானின் முகத்தில் எதிர்பாராத விதமாக தாக்கினார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத உஸ்மான் கான் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் உபைத் ஷாவின் இந்த செயலானது ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியதுடன் அக்காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.