பிஎஸ்எல் 2022:  குவாலிஃபயர் சுற்றுக்கு முன்னேறியது இஸ்லாமாபாத்!

Updated: Fri, Feb 25 2022 10:12 IST
PSL, Eliminator : Islamabad United beat Peshawar Zalmi by five wickets (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பேஷ்வர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பேஷ்வர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக காம்ரன் அக்மல் 58 ரன்களையும், சோயிப் மாலிக் 55 ரன்களையும் சேர்த்தனர். இஸ்லாமாபாத் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். 

இப்போட்டியில் 49 பந்துகளை சந்தித்த அலெக்ஸ் ஹேல்ஸ் 62 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 19.3 ஓவர்களில் இஸ்லாமாபாத் அணி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் பிஎஸ்எல் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முன்னேறியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை