பிஎஸ்எல் 2022: அதிரடியில் மிரட்டும் ஃபகர் ஸமான்; பெஷ்வர் அணிக்கு 200 டார்கெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷ்வர் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய கலந்தர்ஸ் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தும் அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
பின் 41 ரன்னில் ஷஃபிக் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஃபகர் ஸமான் அரைசதம் கடந்தார். பின்னர் களமிறங்கிய காம்ரன் குலாமும் தனது பங்கிற்கு 30 ரன்களைச் சேர்த்தார்.
அதனைத்தொடர்ந்து 66 ரன்கள் எடுத்திருந்த ஃபகர் ஸமானும் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய முகமது ஹபீஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ஹபீஸ் 37 ரன்களையும், ரஷித் கான் 22 ரன்களையும் சேர்த்தனர்.