பிஎஸ்எல் 2022: ஒரு ரன்னில் கராச்சியை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!

Updated: Tue, Feb 15 2022 12:28 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெடுகளை இழந்து 191 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சதாப் கான் 34 ரன்களை எடுத்தார்.

இதையடுத்து இலக்கை துரத்திய கராச்சி கிங்ஸ் அணியில் பாபர் ஆசாம் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுத்தில் காசிம் அக்ரம் - இமாத் வாசிம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். இதனால் அந்த அணி வெற்றிபெற 8 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் இறுதி ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டன் அபாரமாக பந்துவீசி வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஒரு ரன் வித்தியாசத்தியாத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை