பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அப்துல்லா ஷஃபிக் 44 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

கலந்தர்ஸ் அணி தரப்பில் மக்சூத், ஷதாப் கான் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இஸ்லாமாபாத் அணி களமிறங்கியது. 

அந்த அணியில் பால் ஸ்டிர்லிங், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த காலின் முன்ரோ - ஷதாப் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தனர். 

அதன்பின் 52 ரன்களில் ஷதாக் கான் ஆட்டமிழக்க, 60 ரன்களில் முன்ரோவும் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News