இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடரின் ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி-இல் இடம்பிடித்துள்ள சொமர்செட் - சசெக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சொமர்செட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய சொமர்செட் அணியில் ஜார்ஜ் தாமஸ், பெர்ட்லெட், ஜேம்ஸ் ராவ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த உமீத் - கர்டிஸ் காம்பெர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

Advertisement

தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட இருவரும் சதமடித்து அசத்தினர். அதன்பின் உமீத் 119 ரன்களுக்கும், கர்டிஸ் காம்பெர் 101 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் சொமர்செட் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களைக் குவித்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சசெக்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டாம் கிளர்க் 13 ரன்களுக்கும், டாம் ஹைனிஸ் 18 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் இணைந்த டாம் அஸ்லொப் - சட்டேஷ்வர் புஜாரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் அரைசதம் கடந்த அஸ்லொப் 60 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, பின்ன வந்த ஜேம்ஸ் கொலஸ், பிரெண்டிஸ், ஒலிவியர் கார்ட்டர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த புஜாரா சதமடித்து அசத்தியதுடன், 117 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் சசெக்ஸ் அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் சொமர்செட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதமடித்ததுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News