இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாஞ்சாப் மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, பிரப்ஷிம்ரான் சிங் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த அன்மோல்ப்ரீத் சிங் - கேப்டன் மந்தீப் சிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் மந்தீப் சிங் 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சதமடித்து அசத்திய அன்மோல்ப்ரீத் சிங் 10 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய நேஹல் வதேரா அதிரடியாக விளையாடி 61 ரன்களைச் சேர்த்ததன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பரோடா அணியில் ஜெட்ஸ்னில்  சிங் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த நினத் ரத்வா - அபிமன்யூ சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நினத் ரத்வா 47 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த அபிமன்யூ சிங் 61 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் குர்னால் பாண்டியா 45, விஷ்னு சோலங்கி 28 ரன்களில் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் பஞ்சாப் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது. மேலும் இத்தொடரின் ஆட்டநாயகனாக அன்மோல்ப்ரீத் சிங்கும், தொடர் நாயகனாக அபிஷேக் சர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News