ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 52ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது. அதேபோல பஞ்சாப் அணி, 10 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று 5-ம் இடத்தில் உள்ளது.

உத்தேச லெவன்

பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால் (கே), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங்.

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் / யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), ரியான் பராக், ஷிம்ரன் ஹெட்மையர், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட் , பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.

ஃபேண்டஸி லெவன்

  • கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்
  • பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், ஷிம்ரோன் ஹெட்மையர், பானுகா ராஜபக்சே
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின், லியாம் லிவிங்ஸ்டோன், ரிஷி தவான்
  • பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News