SA vs IND: டெஸ்ட் தொடரை தவறவிடும் டி காக்!

Updated: Mon, Dec 13 2021 18:30 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். டிசம்பர் 16 அன்று மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறது.  

இந்நிலையில் சொந்தக் காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டி காக், இந்தியாவுக்கு எதிரான ஓரிரு டெஸ்டுகளைத் தவறவிடவுள்ளார்.  

டி காக்கின் மனைவிக்கு ஜனவரி மாதம் முதல் குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் 2ஆவது மற்றும் 3ஆவது டெஸ்டுகளில் இருந்து டி காக் விலகவுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் விக்டர் இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார். 

குறைந்தபட்சம் 3ஆவது டெஸ்டை டி காக் தவறவிட வாய்ப்புள்ளது. ஒருவேளை 2ஆவது டெஸ்டுக்கு முன்பு கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு டி காக் வெளியேறினால் பாதுகாப்பு காரணங்களால் அவரால் 3ஆவது டெஸ்டிலும் பங்கேற்காத நிலைமை ஏற்படும். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை