காவுண்டி கிரிக்கெட்டிலும் சாதனை படைத்த அஸ்வின்!
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்தின் உள்ளூர் முதல் தர தொடரான ‘கவுண்டி’ சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளார்.
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கும் சாமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி சார்பில் களமிறங்கிய அஸ்வின், ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். இதன்மூலம் கடந்த 11 ஆண்டுகளில் ‘கவுண்டி’ சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் ஓவரை வீசிய சுழற்பந்துவீச்சாளர் எனும் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
முன்ந்தாக கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜீதன் படேல், போட்டியின் முதல் ஓவரை வீசியிருந்ததே சாதனையாக உள்ளது.
சாமர்செட் அணியின் டாம் லம்மன்பியை போல்டாக்கிய அஷ்வின், சர்ரே அணிக்காக தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். ஏற்கனவே இவர், நாட்டிங்காம்ஷயர், வொர்செஸ்டர்ஷயர் அணிகளுக்காக விளையாடியுள்ளா என்பது குறிப்பிடத்தக்கது.