ஸ்டோக்ஸை போல்டாக்கி அசத்திய அஸ்வின்; வைரலாகும் காணொளி!

Updated: Sat, Jan 27 2024 20:25 IST
Image Source: Google

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் ஜனவரி 25ஆம் தொடங்கியது. இப்போட்டியி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவா்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து. இதையடுத்து விளையாடி இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 87, கே.எல்.ராகுல் 86, ஜெய்ஸ்வால் 80, அக்‌ஷர் 44 என அசத்தினார்கள்.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி தங்களது பாஸ்பால் ஆட்டத்தை கையிலெடுத்து அதிரடி காட்டியது. ஆனாலும் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெரும் பின்னடைவை சந்தித்தது. ஆனாலும் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஒல்லி போப் சதமடித்து அசத்தியதுடன், ஆட்டநெர முடிவு வரை விக்கெட்டை இழக்காமல் 148 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது. மேலும், இந்திய அணியை விட இரண்டாவது இன்னிங்ஸில் 126 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், இப்போட்டியின்  முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் அடித்த பென் ஸ்டோக்ஸ் 2ஆவது இன்னிங்ஸில் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட்டானார். அதன்படி இன்னிங்ஸின் 37ஆவது ஓவரை வீசிய ரவிசந்திரன் அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க தடுமாறி வந்த பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரின் 5ஆவது பந்தை கணிக்க தவறினார். இதனால் பந்து நேராக சென்று ஸ்டம்புகளை பதம்பார்த்தது.

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்ற தெரியாமல் பென் ஸ்டோக்ஸ் பெவிலியனை நோக்கி நடையைக் கட்டினார். இந்த விக்கெட்டின்மூலம் அஸ்வின் பென் ஸ்டோக்ஸை டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்டோக்ஸின் விக்கெட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை