ஆலன் டொனால்டின் சாதனையை முறியடித்த காகிசோ ரபாடா!

Updated: Thu, Jun 12 2025 12:19 IST
Image Source: Google

உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் 2025: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அதிக விக்கெட்டுக்ளை வீழ்த்திய 4ஆவது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். 

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங்  செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த் அணியில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டார் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் சேர்த்தனர். 

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து 169 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இந்த நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டின் சாதனையை முறியடித்துள்ளார். இப்போட்டியில் அவர் 5 விக்கெட்டுக்ளை கைப்பற்றியதன் மூலம்,சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அதிக விக்கெட்டுக்ளை வீழ்த்திய 4ஆவது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். 

முன்னதாக ஆலன் டொனால்ட் 72 டெஸ்ட் போட்டிகளில் 330 விக்கெட்டுகளை வீழ்த்தி 4ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது காகிசோ ரபாடா 71 டெஸ்ட் போட்டிகளில் 332 விக்கெட்டுகளை வீழ்த்தி 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் 93 போட்டிகளில் விளையாடி 171 இன்னிங்ஸ்களில் 660 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்

  • டேல் ஸ்டெய்ன் - 93 போட்டிகளில் 171 இன்னிங்ஸ்களில் 660 விக்கெட்டுகள்
  • ஷான் பொல்லாக் - 108 போட்டிகளில் 202 இன்னிங்ஸ்களில் 421 விக்கெட்டுகள்
  • மகாயா நிடினி - 101 போட்டிகளில் 190 இன்னிங்ஸ்களில் 390 விக்கெட்டுகள்
  • ககிசோ ரபாடா - 71 போட்டிகளில் 129 இன்னிங்ஸ்களில் 332 விக்கெட்டுகள்
  • ஆலன் டொனால்ட் - 72 போட்டிகளில் 129 இன்னிங்ஸ்களில் 330 விக்கெட்டுகள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை