ஐபிஎல் திருவிழா 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Apr 14 2022 11:46 IST
Image Source: Google

ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 23ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

போட்டி முன்னோட்டம் 

  • மோதும் அணிகள் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - டிஒய் பாட்டீல் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 4 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதனைதொடர்ந்து குஜராத் அணி, 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. 

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறுவதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: ஜோஸ் பட்லர், ராஸ்ஸி வேன் டெர் டுசென், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரன் ஹெட்மேயர், ரியான் பராக், குல்தீப் சென், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

குஜராத் டைட்டன்ஸ் அணி: மேத்யூ வேட்/ ரஹ்மனுல்லா குர்பாஸ், சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்
  • பேட்டர்ஸ் - ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் பாடிக்கல், ஷுப்மன் கில், அபினவ் மனோகர்
  • ஆல்-ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான், முகமது ஷமி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை