ஐபிஎல் 2022 சீசனின் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - ப்ராபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 2 தோல்விகளை பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. துவக்க ஆட்டங்களில் மிக அபாரமாக ஆடிய ராஜஸ்தான், அதே உத்வேகத்துடன் அடுத்தடுத்த ஆட்டங்களில் ஆடத் தவறியது.

ஜோஸ் பட்லர், ஹெட்மேயர் பேட்டிங்கில் வலுசேர்க்க, கேப்டன் சாம்சன், தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். யுஸ்வேந்திர சஹால், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தி பவுலிங்கில் வலுசேர்க்கின்றனர். குஜராத் அணிக்கு 37 ரன்களில் படுதோல்வியுற்ற அந்த அணி, மீண்டும் வெற்றிப் பயணத்திற்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது.

மறுபக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 வெற்றி, 3 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணியை போலவே துவக்க ஆட்டங்களில் வெற்றிகளை வாரிக் குவித்த கொல்கத்தா, கடைசி ஆட்டங்களில் மிக மோசமாக தோல்வியை தழுவி அதிர்ச்சி அளித்தது. டெல்லி, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்த அந்த அணி, தற்போது ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல், ஸ்ரேயாஸ் ஐயர், பேட் கம்மின்ஸ், நிதிஷ் ரானா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ஆனால் நிலைத்த ஆட்டத்தை இவர்கள் வெளிப்படுத்த தவறுவது அணிக்கு சிக்கலாக மாறுகிறது. துவக்க ஆட்டங்களில் ஜொலித்த உமேஷ் யாதவ் அடுத்தடுத்த ஆட்டங்களில் சோபிக்கத் தவறியது தொடர் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பவுலிங்கில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி இன்னும் சிறப்பாக பந்துவீசும் நெருக்கடியில் உள்ளனர்.

இரு அணிகளும் கிட்டத்தட்ட சம பலம், பலகீனங்களை உடையவை என்பதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 24
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 11
  • கொல்கத்தா வெற்றி - 13

உத்தேச அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் : ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷிம்ரான் ஹெட்மையர், ரியான் பராக், ஜேம்ஸ் நீஷம்/ ட்ரெண்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஆரோன் ஃபின்ச், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கே), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெல்டன் ஜாக்சன், பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், அமன் கான், வருண் சக்ரவர்த்தி 

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்
  • பேட்டர்ஸ் - ஷிம்ரான் ஹெட்மையர், தேவ்தத் படிக்கல், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், பாட் கம்மின்ஸ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News