தனக்கு பிடித்த சுழற்பந்து வீச்சாளர் குறித்து மனம் திறந்த ரங்கனா ஹெரத்!

Updated: Sat, Aug 10 2024 14:50 IST
Image Source: Google

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளசர் ரங்கனா ஹெர்த். இவர் இலங்கை அணிக்காக 1999ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுநாள் வரை இலங்கை அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுகளையும் 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகளையும், 17 டி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் என கைப்பற்றி மொத்தமாக 500க்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 

இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரங்கனா ஹெர்த், அதன்பின் வங்கதேச கிரிக்கெட் அணியின் சழற்பந்து வீச்சு ஆலோசகராக செயல்பட்டார். அதன்பின் ஆலோசகராக இருந்த அவரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் சுழற்ந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்தது. இந்நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் அவர் வங்கதேச அணியின் சழற்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியை ஏற்கமறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் தற்சமயத்தில் தமக்கு பிடித்த சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை ரங்கனா ஹெரத் தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்துக் கொண்டால் அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நாதன் லையன் ஆகியோரது பெயர்களை முதலில் கூறுவேன். அதேபோம் தென் ஆப்பிரிக்க அணியின் இடதுகை சுழறப்ந்து வீச்சாளரான கேசவ் மஹாராஜையும் எனக்கு பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேற்கொண்டு இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்து வீசுவதை நான் எப்போதும் ஆர்வமாக பார்ப்பேன். இலங்கை அணியிலிருந்து கண்டிப்பாக பிரபத் ஜெயசூர்யாவை எனக்கு பிடித்த சுழற்பந்துவீச்சாளர் பட்டியலில் சேர்ப்பேன். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த சிறந்த சுழற்ப்ந்து வீச்சாளர்கள் யார் என்ற கேள்வி எழும்போதெல்லாம் எனக்கு இவர்களின் பெயர்கள்தான் முதலில் எனது மனதிற்குள் வரும்" என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை