ரஞ்சி கோப்பை: ரஹானே, ஜெய்ஷ்வால், சர்ஃப்ராஸ் அதிரடியில் மும்பை அபார வெற்றி!

Updated: Thu, Dec 22 2022 19:49 IST
Ranji Trohpy 2022 -23: Shams Mulani takes 11, Mumbai beats Hyderabad by an innings and 217 runs!
Image Source: Google

இந்தியாவில் பாரம்பரிய மிக்க கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மறுமுனையில் வழக்கம்போலவே அதிரடியாக விளையடைய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்தார். 195 பந்தில் 27 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 162 ரன்களை குவித்தார். 

அதேபோல் இப்போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 80 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். அதன்பின் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட மும்பை அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, புஜாராவை போல மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற வேட்கையில் சிறப்பாக பேட்டிங் விளையாஇ இரட்டை சதமடித்தார். 

இப்போட்டியில் 261 பந்துகளில் சந்தித்த அவர், 3 சிக்சர்கள் 26 பவுண்டரிகள் என மொத்தம் 204 ரன்களை குவித்தார் ரஹானே. மறுபக்கம் சர்ஃபராஸ் கானும் 126 ரன்களை குவிக்க, மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 651 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹைதராபாத் அணி, ரோஹித் ராயுடு மட்டுமே சிறப்பாக விளையாடி 77 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 214 ரன்களுக்கு ஹைதராபாத் அணி ஆல் அவுட்டானது. மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 7 விக்கெட் வீழ்த்தினார்.

அதன்பின் 437 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த ஹைதராபாத் அணி வீரர்கள் இந்த இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் சொதப்பியதால், 220 ரன்களுக்கே ஆல் அவுட்டானது அந்த அணி. 2ஆவது இன்னிங்ஸில் ராகுல் புத்தி 65 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்திய ஷாம்ஸ் முலானி, 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்தினார். 

இதன்மூலம் மும்பை அணி இப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாம்ஸ் முலானி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை