Shams mulani
துலீப் கோப்பை 2024: ஷம்ஸ் முலானி அபார பந்துவீச்சி; இந்திய டி அணியை வீழ்த்தியது இந்தியா ஏ!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஷம்ஸ் முலானி, தனூஷ் கோட்டியான் ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிக்ஸில் 290 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 89 ரன்களையும் தனூஷ் கோட்டியான் 53 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா டி அணியில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படிக்கல் 92 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழது பெவிலியன் திரும்பினர். இதனால் இந்தியா டி அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
Related Cricket News on Shams mulani
-
துலீப் கோப்பை 2024: முலானி, கோட்டியான் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட இந்திய ஏ!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இரானி கோப்பை: ரெஸ்ட் அஃப் இந்திய அணியில் மேலும் ஒரு மாற்றம்!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் காயமடைந்த மயங்க் மார்கண்டேவுக்குப் பதிலாக மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஷாம்ஸ் முலானி தேர்வாகியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை: ரஹானே, ஜெய்ஷ்வால், சர்ஃப்ராஸ் அதிரடியில் மும்பை அபார வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24