ரஞ்சி கோப்பை 2022: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் தமிழ்நாடு!

Updated: Fri, Mar 04 2022 17:38 IST
Image Source: Google

கௌகாத்தியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எனினும் முதல் 4 விக்கெட்டுகளை 32 ரன்களுக்குள் இழந்து தடுமாறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - சாய் கிஷோர் ஜோடி தமிழக அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டும் வரை அற்புதமாக விளையாடியது. 

இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 3ஆவது சதமெடுத்து அசத்தினார் இந்திரஜித். அவர் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு சாய் கிஷோர் 81 ரன்களிலும் ஷாருக் கான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டது.

இதனால் முதல் நாள் முடிவில் தமிழக அணி, 72 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. ஜெகதீசன் 10, முகமது 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜார்க்கண்ட் அணியின் ராகுல் சுக்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 74.3 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் உட்கர்ஷ் சிங் 52, கேப்டன் செளரப் திவாரி 58 ரன்கள் எடுத்தார்கள். எம். சித்தார்த் 4 விக்கெட்டுகளும் ஷாருக் கான் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இதன் மூலம் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தமிழ்நாடு அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்களைச் சேர்த்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை