ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணிக்கு ரவிகுமார் சமர்த் - கேப்டன் மயங்க் அகர்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மயங்க் அகர்வால் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சமர்த்துடன் இணைந்த தேவ்தத் படிக்கல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

Advertisement

அதன்பின் 57 ரன்கள் எடுத்திருந்த ரவிக்குமார் சமர்த் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிகின் ஜோஸ் 13 ரன்களுக்கும், மனிஷ் பாண்டே ஒரு ரன்னிலும், கிஷான் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்தியதுடன் 150 ரன்களையும் சேர்த்தார். 

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடாக அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்தது. கர்நாடகா அணி தரப்பில் தேவ்தத் படிக்கல் 151 ரன்களுடனும், ஹர்திக் ராஜ் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News