இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதல் அரையிறுதி போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய கேரளா அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டௌகளை இழந்த நிலையில், 6ஆவது விக்கெட்டிறு களமிறங்கிய முகமது அசாருதீன் அபாரமான சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 177 ரன்களைக் குவித்தார். அவரைத் தவிர்த்து கேப்டன் சச்சின் பேசி 69 ரன்களையும், சல்மான் நிஷார் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கேரளா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

குஜராத் அணி தரப்பில் நாக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகளையும், கேப்டன் சிந்தன் கஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் அணிக்கு பிரியங்க் பாஞ்சல் - ஆர்யா தேசாய் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 73 ரன்களை சேர்த்த கையோடு ஆர்யா தேசாய் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் பாஞ்சலுடன் இணைந்த மனன் ஹிங்ராஜியாவும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த பிரியங்க் பாஞ்சல் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைக் குவித்துள்ளது. இதில் பிரியங்க் பாஞ்சல் 117 ரன்களுடனும், மனன் ஹிங்ராஜியா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 235 ரன்கள் பின் தங்கிய நிலையில் குஜராத் அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News