அக்., 20 முதல் தொடங்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

Updated: Sun, Jul 04 2021 13:46 IST
Image Source: Google

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு பல்வேறு வகையான கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக இந்தியாவின் முக்கிய உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை தொடரும் ரத்து செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நடப்பாண்டிலும் கரோனா தொற்று காரணமாக ஐபிஎல் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதனால் இந்தாண்டும் உள்ளூர் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன. 

ஆனால் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு உள்ளூர் கிரிக்கெட் சீசனைத் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 20 முதல் அடுத்தாண்டு மார்ச் 26ஆம் தேதி வரையிலான உள்ளூர் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி சயீத் முஸ்டாக் அலி கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 20 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரையிலும், நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடர் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 19ஆம் தேதி வரையிலும், விஜய் ஹசாரே கோப்பை தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரையிலும் நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. 

கிட்டத்தட்ட அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் இந்தாண்டு நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளதால், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை